கதை சொல்லிப்பார்தேன் மூன்றாம் பகுதி.....
மதியம் இரண்டு மணிக்கு சரியாக வீட்டில் காப்பிக்கடை திறந்துவிடும்! பாட்டி எங்கள் சமையல் அறையில் உள்ள காப்பி கவுண்டரில் கும்பகோணம் டிகிரி காபி தயாரித்து அதை கவுண்டரின் அரைச்சுவரில் வைப்பார்கள் அதை நாங்கள் எடுத்து வந்து கூடத்தில் அல்லது ஊஞ்சலில் அமர்ந்து குடிப்பது வழக்கம். சில நாட்களில் சூடாக வறுத்த நிலக்கடலை, குணுக்கு, அல்லது தவலை அடை போன்ற ஏதோ ஒன்று கிடைக்கும் பாக்கியமும் உண்டு!
சிறிது நேரம் சென்றதும் எல்லாமே துரித கதியில் நடைபெறத் துவங்கும். எதிர்த்த வீட்டு மாமி, பக்கத்து வீட்டு பார்வதியம்மாள், பின் தெருவில் இருக்கும் வீரம்மாள், சன்னதிதெரு குருக்களாத்து மாமி என்று இப்படி சிலர் வருகை தந்ததும் என் அம்மா, பாட்டி ஆகியோர் படு பிசியாகி ஊர் நிலவரம் அலசப்படும், அதில் என் பாட்டிக்கு பிடித்தமான, கொட்டகையில் ஓடும் சினிமாவைப்பற்றியும் செய்திகளும் உண்டு. அப்பொழுதே அவர்களின் வார இறுதி ப்ரொக்ராமையும் உறுதிப்படுத்திக் கொள்வார்கள்! ஆனால் அன்று அவர்களது சந்திப்பு விரைவாகவே முடிவடைந்தது! காரணம் எங்கள் ஊர் ராமர் கோயில் அர்ச்சகர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்! அவருக்கு பாட்டி முதலில் கைகளில் ஜலம் விட்டு பிறகு சூடான காப்பியையும் கொடுத்தார்!

No comments:
Post a Comment